Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 843)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
ரத்ந அம்சுபி: தவ ததா மணி பாதரக்ஷே ஸம்ரஜ்யமாந வபுஷாம் ரஜநீமுகேஷு ஆகஸ்மி காகதம் அதர்சி மஹௌஷதித்வம் ஸாகேத பத்தந ஸமீபருஹாம் த்ருமாணாம்
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! நீ அயோத்தியின் சக்ரவர்த்தினியாகப் பட்டம் ஏற்று, அந்த நாட்டைக் காப்பாற்றிய காலத்தில், உன்னுடைய இரத்தினக்கற்களின் ஒளி காரணமாக பளபளப்பான உருவம் பெற்றதாக அயோத்திக்கு அருகில் இருந்த மரங்கள் காணப்பட்டன. இதனைக் காணும்போது, இரவுப்பொழுதில் ஜ்வலிக்கின்ற ஹௌஷதி என்ற தன்மை அவற்றுக்குத் திடீரென ஏற்பட்டதாகத் தோன்றின.