Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 842)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

ஸ்பீதம் பதாவநி தவ ஸ்நபந ஆர்த்ர மூர்த்தே: ஆஸாகரம் ததம் அபூத் மணிரச்மி ஜாலம் லீலோசிதம் ரகுஸுதஸ்ய சரவ்யம் ஆஸந் யாதூநி யஸ்ய வலயேந விவேஷ்டிதாநி

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! திருமஞ்சனம் மூலம் நனைந்துள்ள உனது இரத்தினக்கற்களின் ஒளியானது ஸமுத்திரம் வரை பரவி நின்றது. அந்த ஒளியானது ஒரு வலை போன்று காணப்பட்டது. அந்த வலையில் சூழப்பட்ட அரக்கர்கள் அனைவரும் இராமனின் பாணங்களுக்கு விளையாட்டு போன்று இலக்கானார்கள்.