Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 841)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
சோணோபலை: சரண ரக்ஷிணி ஸம்ச்ரிதேஷு ச்சாயாத்மநா மரதகேஷு தவ அவகாட: அந்வேதி சௌரி: அபித: பலபங்க்தி சோபிநி ஆத்மாந மேவ சயிதம் வடபத்ர மத்யே
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளை காப்பாற்றும் பாதுகையே! பத்மராகக்கற்களால் சூழப்பெற்ற உனது பச்சைக்கற்களின் பிரதிபிம்பமாக ஸ்ரீரங்கநாதன் புலப்படுகிறான். அப்போது அவன் அனைத்தும் பக்கங்களிலும் பவழ வரிசைகளால் சூழப்பட்டு ஆலிலையின் நடுவே சயனித்திருந்த திருக்கோலத்தை ஒத்த, தன்னையே நிகர்த்தபடி உள்ளான்.