Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 840)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
மஞ்ஜுஸ்வநா மரதகோபல மேசக அங்கீ சோணாச்ம துண்ட ருசிரா மணிபாதுகே த்வம் பத்மாவிஹார ரஸிகஸ்ய பரஸ்ய யூந: பர்யாயதாம் பஜஸி பஞ்ஜர சாரிகாணாம்
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! மரகதக்கற்களால் பச்சை நிறம் கொண்டவையாக, பத்மராகக் கற்களால் சிவந்த மூக்கை உடையவையாக, உனது நாதங்கள் மூலம் இனிய மழலைப் பேச்சு எழுப்பியபடி உள்ள கிளிகளின் தோற்றத்தை நீ அடைகிறாய். இப்படியாக ஸ்ரீரங்கநாச்சியாருடன் விளையாடி மகிழ்வதில் விருப்பம் கொண்ட உயர்ந்த புருஷனான ஸ்ரீரங்கநாதனின் அருகில் உள்ள கிளிகளின் ஒற்றுமையை நீ அடைகிறாய்.