Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 839)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
அச்சேத்ய ரச்மி நியத க்ரம ரத்நதுர்யா நிஷ்கம்பகூபர நிபம் தததீ ப்ரதீகம் க்ரீடாகதேஷு மதுஜித் பதபத்ம லக்ஷ்ம்யா: கர்ணீரத: த்வம் அஸி காஞ்சந பாதரக்ஷே
தங்கமயமான பாதுகையே! சற்றும் குறையாத ஒளி வீசுகின்ற, வரிசையாகப் பதிக்கப்பட்டுள்ள இரத்தினக்கற்களின் ஒளியானது அறுகாத கடிவாளங்கள் போன்று உள்ளன. இந்தக் கயிறுகளால் கட்டப்பட்ட ஒழுங்கான நடையுடன் கூடிய குதிரைகளாக அந்த இரத்தினக் கற்களே உள்ளன. இந்தக் குதிரைகள் கட்டப்பட்ட தேரின் முன்பாகமாக உனது குமிழ்கள் உள்ளன. இப்படியாக ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சார காலங்களில் அவனது திருவடியில் உள்ள மஹாலக்ஷ்மிக்கு ஏற்ற சிறு தேராக நீ உள்ளாய்.