Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 838)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

தூர ப்ரஸாரித கரா நிநதை: மணீநாம் ஆயாதி தைத்ய ரிபு: இதி அஸக்ருத் ப்ருவாணா தைத்யேச்வராந் அபிமுகாந் ஜநித அநுகம்பா மந்யே நிவாரயஸி மாதவ பாதுகே த்வம்

ஸ்ரீரங்கநாச்சியாரைத் தரித்த பெரியபெருமாளின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனை எதிர்த்து வருகின்ற அசுரர்களின் தலைவர்களை மிகுந்த கருணையுடன் நீ காண்கிறாய். உனது இரத்தினக்கற்களின் ஒளியைக் கைகள் போன்று நீட்டியும், உனது இரத்தினக்கற்களின் நாதம் மூலம் ஸ்ரீரங்கநாதன் வருவதை உணர்த்தியும் அவர்களைத் தடுக்கிறாய் போலும்.