Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 836)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

மத்யே பரிஸ்புரித நிர்மல சந்த்ர தாரா ப்ராந்தேஷு ரத்நநிகரேண விசித்ரவர்ணா புஷ்ணாஸி ரங்க ந்ருபதே: மணிபாதுகே த்வம் சக்ஷுர் வசீகரண யந்த்ர விசேஷ சங்காம்

ஸ்ரீரங்கநாஜனின் இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! உன்னுடைய நடுப்பகுதியில் ப்ரகாசமானதும், தோஷங்கள் அற்றதும் ஆகிய முத்துக்கள், தங்கம் போன்றவை உள்ளன. இதனைச் சுற்றி ஓரங்களில் பலவிதமான இரத்தினங்கள் மூலமாக வெண்மை, சிவப்பு போன்ற பலவிதமான நிறங்கள் எழுத்து போன்று உள்ளன. இப்படியாக உன்னைக் காணும்போது, காண்பவர் கண்களை வசப்படுத்தும் யந்த்ரமாக நீ உள்ளாயோ என்று ஐயத்தை உண்டாக்குகிறது.