Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 835)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
மஞ்ஜுஸ்வநாம் மணி மயூக கலாபநீம் த்வாம் த்ருஷ்ட்வா கபர்த ஸவிதே விநிவேச்யமாநாம் கூடீபவந்தி கருடத்வஜ பாதரக்ஷே பூத்காரவந்தி புரவைரி விபூஷணாநி
கருடனைக் கொடியாக உடைய ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! த்ரிபுரன் என்ற அசுரனுக்கு விரோதியான சிவனின் தலைக்கு அருகில் நீ செல்கிறாய். அப்போது உன்னில் பதிக்கப்பட்ட பலவிதமான இரத்தினங்களின் ஒளியானது, மயில்தோகை போன்று உள்ளதைக் கண்டு, சிவனின் தலையில் உள்ள பாம்புகள் சீறிப்பாய்ந்து ஒளிந்து கொள்கின்றன (இங்கு பாம்புகளுக்குப் பகையான கருடனைக் கூறும் நயம் காண்க).