Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 834)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
மணிபி: மதுவைரி பாதரக்ஷே பவதீ விக்ரமணே ப்ரவர்த்தமாநா யுகபத் பவதாம் யுகாந்தகாலே திவி லக்ஷ்மீம் விததே திவாகராணாம்
மது என்ற அசுரனின் விரோதியான ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் த்ரிவிக்ரமனாக நின்று இந்த உலகங்களை அளக்கும்போது, நீயும் பெரிதாக வளர்ந்தாய். அப்போது உன்னில் பதிக்கப்பட்ட இரத்தினங்களால் ப்ரளயகாலத்தில் ஒரே நேரத்தில் ஏற்படுகிற பல சூரியன்களின் தோற்றத்தை உண்டாக்கினாய்.