Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 833)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
சுபசப்த விசேஷ ஸம்ச்ரிதாபி: பவதீ சௌரி பதாவநி க்ரியாபி: அநுதிஷ்டதி நூநம் ஆச்ரிதாநாம் அகில உபத்ரவ சாந்திகம் நவீநம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரத்தின்போது சுபமான இனியநாதங்களை மந்த்ரங்கள் போன்று ஒலிக்கிறாய். இப்படிப்பட்ட ஸஞ்சாரம் என்பதன் மூலம் நீ, உன்னை அடைந்தவர்களுக்குப் புதிதுபுதிதாக ஏற்படக்கூடிய உபத்ரவங்களை நீக்கும் செயல்களைச் செய்கிறாய் என்பது நிச்சயம்.