Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 832)

Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி

மதுர ஸ்மித ரம்ய மௌக்திகஸ்ரீ: விசஸி வ்யஞ்ஜித மஞ்ஜுள ப்ரணாதா ஸஹ ரங்கந்ருபேண வாஸகேஹம் தநு மத்யா மணிபாதுகே த்வமேகா

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! இனிமையான சிரிப்பு போன்ற அழகான முத்துக்களின் ஒளியை உடையவளாகவும், இனிமையான நாதங்களை ஏற்படுத்துபவளாகவும், சிறிய நடுப்பகுதியைக் (இடுப்பு போன்று) கொண்டவளாகவும் உள்ள நீ, ஸ்ரீரங்கராஜனுடன் தனியாக அவனுடைய அந்தப்புறத்திற்குச் செல்கிறாய்.