Sri Paduka Sahasram - Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி (ச்லோகம் 831)
Paththati 29 - ப்ரகீர்ணக பத்ததி
விதௌ ப்ரவ்ருத்தே யத் த்ரவ்யம் குணஸம்ஸ்கார நாமபி: ச்ரேயஸ்ஸாதநம் ஆம்நாதம் தத் பதத்ரம் ததாஸ்து மே
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளின் தொடர்பு, அடியார்களுக்குத் தூய்மையை ஏற்படுத்துவது போன்ற குணங்களுடன் கூடியவள்; தங்கக்கவசம், இரத்தினக்கற்கள் ஆகிய மேன்மைகளுடன் கூடியவள்; பாதுகை, சடகோபன் என்று பல திருநாமங்களுடன் கூடியவள்; ஸ்ரீரங்கநாதனின் ஸஞ்சாரத்தின்போது காணப்படும் உயர்ந்த வஸ்து என்று கூறப்படுபவள் - இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகை எனக்கு உயர்ந்த புருஷார்த்தத்தை அளிக்கட்டும்.