Sri Paduka Sahasram - Paththati 28 - ஸுபாஷித பத்ததி (ச்லோகம் 830)
Paththati 28 - ஸுபாஷித பத்ததி
அதரீக்ருத: அபி மஹதா தமேவ ஸேவேத ஸாதரம் பூஷ்ணு: அலபத ஸமயே ராமாத் பாதக்ராந்தாபி பாதுகே ராஜ்யம்
மேலும் மேலும் உயர எண்ணுபவன், உயர்ந்த ஒருவனால் தாழ்வாக நடத்தப்பட்டாலும், அவனையே அண்டி வணங்கி நிற்கவேண்டும். பாதுகையானது இராமனின் திருவடிகளால் மிதிக்கப்பட்டாலும், ஒரு காலகட்டத்தில் இந்த இராமனின் ராஜ்யத்தையே அடைந்தாள்.