Sri Paduka Sahasram - Paththati 28 - ஸுபாஷித பத்ததி (ச்லோகம் 829)
Paththati 28 - ஸுபாஷித பத்ததி
கதிஹேது: அபூத் க்வசித் பதே ஸ்திதி ஹேது மணிபாதுகா க்வசித் ந ஹி வஸ்துஷு சக்தி நிச்சயோ நியதி: கேவலம் ஈச்வர இச்சயா
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையானது ஓர் இடத்தில் (திருவடியில்) ஸஞ்சாரத்திற்கே காரணமாக உள்ளாள். அதே பாதுகை வேறோர் இடத்தில் (ஸிம்ஹாஸனம்) ராஜ்யத்தை அமர்ந்து காப்பாற்றுவதற்கான காரணமாக உள்ளாள். ஆக பொருள்களில் இந்தப் பொருள், இந்தச் செயலை மட்டுமே செய்யும் என்ற நியதி இல்லை. ஈச்வரனின் இச்சையினால் மட்டுமே இவ்விதம் நடக்கிறது.