Sri Paduka Sahasram - Paththati 28 - ஸுபாஷித பத்ததி (ச்லோகம் 827)

Paththati 28 - ஸுபாஷித பத்ததி

நாதிக்ராமேச் சரணவஹநாத் பாதுகா பாதபீடம் யத்வா ஆஸந்நம் பரம் இஹ ஸதா பாதி ராஜ அஸநஸ்ய பூர்வத்ரைவ ப்ரணிஹிதம் அபூத் ஹந்த ராமேண ராஜ்யம் சங்கே பர்த்து: பஹுமதிபதம் விக்ரமே ஸாஹசர்யம்

இராமனின் திருவடிகளை எப்போதும் தாங்கி நிற்கும் காரணத்தினால் திருவடியை வைக்கின்ற பீடத்தைக் காட்டிலும் பாதுகைக்கு உயர்வு இல்லை என்றாகிறது (காரணம் ஸிம்ஹாஸனத்தை விட்டுப் பாதுகைகள் ஸஞ்சார காலத்தில் புறப்பட்டாலும், திருவடியை வைக்கின்ற ஆஸனம் அங்கேயே உள்ளது). அது போன்று பாதுகை, ஆஸனபீடம் ஆகிய இரண்டிற்குள் ஸிம்ஹாஸனத்திற்கு மிகவும் நெருக்கமாக ஆஸனபீடமே உள்ளது. இப்படி உள்ளபோதிலும் இராமனால் பாதுகையிடமே ராஜ்யம் ஒப்படைக்கப்பட்டது. இது ஏன்? ஆஹா! விரோதிகளை அழிக்கின்ற காலத்தில் இராமனுடன் அவனை விடாமல் பாதுகை ஸஞ்சாரம் செய்து, அவனுக்கு உதவி செய்ததால், பாதுகைக்குக் கிட்டிய வெகுமதியே இதன் காரணம் என்று எண்ணுகிறேன்.