Sri Paduka Sahasram - Paththati 28 - ஸுபாஷித பத்ததி (ச்லோகம் 826)
Paththati 28 - ஸுபாஷித பத்ததி
ராமே ராஜ்யம் பிது: அபிமதம் ஸம்மதம் ச ப்ரஜாநாம் மாதா வவ்ரே ததிஹ பரதே ஸத்யவாதீ ததௌ ச சிந்தாதீத: ஸமஜநி ததா பாதுகார்க்ய அபிஷேக: துர்விஜ்ஞாந ஸ்வஹ்ருதயம் அஹோ தைவம் அத்ர ப்ரமாணம்
இராமனிடம் ராஜ்யம் இருப்பது என்பது தசரதரின் விருப்பமாகவும், ஜனங்களின் விருப்பமாகவும் இருந்தது. அப்போது அந்த ராஜ்யத்தை மாதாவான கைகேயி பரதனிடம் இருக்கவேண்டும் என்று கேட்டாள். ஸத்யத்தின் வழிமாறாத தசரதனும் அவ்விதமே செய்தார். ஆனால் அந்த நேரத்தில் யாராலும் எண்ணிக்கூட பார்க்க இயலாதபடி உயர்ந்த பாதுகா பட்டாபிஷேகம் நடந்தது. இந்த உலகில் அறிய இயலாத கருத்தைக் கொண்ட தெய்வமே செல்வாக்கு உடையதாகிறது.