Sri Paduka Sahasram - Paththati 28 - ஸுபாஷித பத்ததி (ச்லோகம் 825)

Paththati 28 - ஸுபாஷித பத்ததி

சரணம் அநக வ்ருத்தே: கஸ்யசித் ப்ராப்ய நித்யம் ஸகல புவந குப்த்யை ஸத்பதே வர்த்ததே ய: நரபதி பஹுமாநம் பாதுகேவ அதிகச்சந் ஸ பவதி ஸமயேஷு ப்ரேக்ஷிதஜ்ஞை: உபாஸ்ய:

குற்றம் இல்லாத, அவைவராலும் கொண்டாடப்படும்படியாக நடவடிக்கைகள் கொண்டவராக உள்ள ஒருவரின் திருவடிகளை அடைந்து, எப்போதும் உலகின் நன்மையைக் குறித்தும், உலகைக் காப்பாற்றுவது குறித்தும் சிந்தனை செய்தபடி ஒருவன் இருக்கக்கூடும். அவன் பாதுகைகள் போன்று அரசர்களுக்கு செய்யப்படும் மரியாதைகளையும், அரசர்களால் செய்யப்படும் மரியாதைகளையும் அடைந்து, அந்தந்த காலகட்டங்களில் புத்திமான்களால் உபாஸிக்கப்படுவான் (இராமனின் திருவடிகளை அடைந்து நின்ற பாதுகைகளுக்கு இந்த மரியாதை கிட்டியது).