Sri Paduka Sahasram - Paththati 28 - ஸுபாஷித பத்ததி (ச்லோகம் 824)
Paththati 28 - ஸுபாஷித பத்ததி
அந்யேஷு ஸத்ஸ்வபி நநேந்த்ர ஸுதேஷு தைவாத் ப்ரஷ்ட: பதாத் அதிகரோதி பதம் பதார்ஹ: ப்ராயோ நிதர்சயதி தத் ப்ரதமோ ரகூணாம் தத்பாதயோ: ப்ரதிநிதீ மணிபாதுகே வா
தெய்வத்தின் ஸங்கல்பம் காரணமாக, அரச பட்டத்திற்குத் தகுதி படைத்த ஒருவன் அதனை நழுவவிட்டாலும், சிறிது காலம் கழித்து அடைந்துவிடுகிறான். இதனை ரகுவம்சத்தின் சிறந்தவனான இராமன் காண்பிக்கிறான். அவனுடைய திருவடிகளின் ப்ரதிநிதிகளான இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகைகள் உணர்த்துகிறாள்.
ஒருவனுக்கு ஒரு பதவி கிட்ட வேண்டும் என்றால், அந்தப் பதவியானது ஒருமுறை இல்லாவிட்டாலும் மற்றொரு முறை அவனைத் தேடி வந்துவிடும். இராமன் அரசபதவி ஏற்பது தடைபட்டாலும், அவன் தம்பிகள் உள்ளபோதிலும் அவனது பாதுகைகள் அல்லவோ அரச பதவியைப் பிடித்தாள்?