Sri Paduka Sahasram - Paththati 28 - ஸுபாஷித பத்ததி (ச்லோகம் 823)

Paththati 28 - ஸுபாஷித பத்ததி

ப்ரஹ்மாஸ்த்ரதாம் அதிஜகாம த்ருணம் ப்ரயுக்தம் புண்யம் சரவ்யம் அபவத் பயஸாம் நிதிர்வா ப்ருத்வீம் சசாஸ பரிமுக்த பதம் பதத்ரம் கிம் வா ந கிம் பவத் கேளிவிதௌ விபூநாம்

ஸ்ரீராமனின் திருக்கரம் கொண்டு எறிந்த புல்லானது ப்ரஹ்மாஸ்திரம் ஆனது. அவனுடைய பாணத்திற்குப் பரசுராமனின் புண்ணியமும், ஸமுத்திரமும் (இரண்டுமே குறிபார்ப்பதற்கு இயலாதவை) இலக்காக நின்றன. அவனுடைய பாதுகைகள் திருவடிகளைக் காப்பதை விட்டு, இந்த உலகம் முழுவதையும் காப்பாற்றினாள். வல்லவர்களின் விளையாட்டில் எந்தப் பொருள்தான் எந்தப் பொருளாக மாறாது?