Sri Paduka Sahasram - Paththati 28 - ஸுபாஷித பத்ததி (ச்லோகம் 822)

Paththati 28 - ஸுபாஷித பத்ததி

ஸந்த: ஸ்வதேச பரதேச விபாக சூந்யம் ஹந்த ஸ்வவ்ருத்திம் அநகாம் ந பரித்யஜந்தி ராஜ்யே வநே ச ரகுபுங்கவ பாதரக்ஷே நைஜம் ஜஹௌ ந கலு கண்டக சோதநம் தத்

சிறிதும் குற்றங்கள் இல்லாத தங்கள் கர்மங்களைப் பெரியவர்கள் தங்கள் ஊராக இருந்தாலும், வெளியூராக இருந்தாலும் கைவிடுவதில்லை. இது போன்று இராமனின் பாதுகையானது ராஜ்யத்திலும் கானகத்திலும் கண்டகசோதனம் என்பதைச் செய்தபடி இருந்தாள்.

கண்டகசோதனம் என்றால் முள் இல்லாமல் செய்வது ஆகும். கானகத்தில் முள் என்பது, ராஜ்யத்தில் சத்ருக்கள் என்று கருத்து.