Sri Paduka Sahasram - Paththati 28 - ஸுபாஷித பத்ததி (ச்லோகம் 821)
Paththati 28 - ஸுபாஷித பத்ததி
கலாஸு காஷ்டாம் ஆதிஷ்டந் பூம்நே ஸம்பந்திநாமபி பாதுகா ரங்க துர்யஸ்ய பரத ஆராத்யதாம் கதா
கலைகளில் தேர்ச்சி பெற்று அதன் உச்சத்தை அடைந்தவன், தன்னைச் சேர்ந்தவர்களுக்கு பெருமை உண்டாக்குபவனாக ஆகிறான். நாடகங்களை நிகழ்த்துவதில் வல்லவனாகிய ஸ்ரீரங்கநாதனின் பாதுகை, பரத சாஸ்த்ர நிபுணர்களால் (பரதனால் என்று சிலேடை) கொண்டாடப்படுகிறது.