Sri Paduka Sahasram - Paththati 27 - ரேகா பத்ததி (ச்லோகம் 820)

Paththati 27 - ரேகா பத்ததி

ரேகா அபதேசத: த்வம் ப்ரசமயிதும் ப்ரளய விப்லவ ஆசங்காம் வஹஸி மதுஜித் பதாவநி மந்யே நிகமஸ்ய மாத்ருகா லேக்யம்

மது என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ப்ரளய காலத்தில் வேதங்கள் அழித்துவிடுமோ என்ற சந்தேகம் சிலருக்கு உண்டாகலாம். இதனால் அந்த சந்தேகத்தை நீக்கும் விதமாக உன்னில் காணப்படும் கோடுகள் என்பதன் மூலம், வேதங்களின் ப்ரதியை நீ வைத்துக் கொண்டுள்ளாய் என்பதை உணர்த்துகிறாய் போலும்.