Sri Paduka Sahasram - Paththati 27 - ரேகா பத்ததி (ச்லோகம் 819)

Paththati 27 - ரேகா பத்ததி

பாதாவநி ப்ரதிபதம் பரமஸ்ய பும்ஸ: பாதாரவிந்த பரிபோக விசேஷயோக்யா ஸ்வாபாவிகாந் ஸுபகபக்தி விசேஷ த்ருச்யாந் ரேகாத்மகாந் வஹஸி பத்ரலதா விசேஷாத்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் தாமரை மலர் போன்ற திருவடிகளின் அனுபவத்திற்கு ஏற்றவளாக நீ உள்ளாய். இதனால் இயற்கையாகவே உன் மீது அமைந்துள்ள ரேகை உருவத்தில் இலை, கொடி போன்றவற்றை நீ தரிக்கிறாய் போலும்.

நாயகன் நாயகியுடன் இன்பமாக இருக்கும்போது நாயகியின் கன்னம், தோள் போன்றவற்றில் மீன், இலை போன்ற வடிவங்களை நாயகன் வரைவது இயல்பாகும். இதற்கு மகரிகாபத்திரம் என்று பெயர். நாயகனான திருவடியுடன் இணைந்து நிற்கும் காலத்தில், இதே உருவங்கள் பாதுகையில் உள்ளன என்கிறார்.