Sri Paduka Sahasram - Paththati 27 - ரேகா பத்ததி (ச்லோகம் 818)
Paththati 27 - ரேகா பத்ததி
பக்த்யா முஹு: ப்ரணமதாம் த்ரிதசேச்வராணாம் கோடீர கோடிகஷணாத் உபஜாயமாநை: ஆபாதி சௌரி சரணாத் அதிகாநுபாவா ரேகாசதை: தவ பதாவநி காபி ரேகா
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! பக்தி காரணமாக தேவர்கள் உன்னை அடிக்கடி வணங்குகின்றனர். இதனால், அந்த க்ரீட முனைகளால் உன் மீது நூற்றுக்கணக்கான கோடுகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காட்டிலும் அதிகமான கோடுகள் உனக்கு உள்ளது என்னும் உனது பெருமை விளங்குகிறது.