Sri Paduka Sahasram - Paththati 27 - ரேகா பத்ததி (ச்லோகம் 817)
Paththati 27 - ரேகா பத்ததி
ஸ்நாதா பதாவநி சிரம் பரிபுஜ்ய முக்தா பாதேந ரங்கந்ருபதே: சுபலக்ஷணேந ரேகாந்தரை: நவநவை: உபசோபஸே த்வம் ஸம்ஸ்கார சந்தந விலேபந பங்க லக்நை:
ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! சுபமான பல அடையாளங்கள் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் இருந்து, ஸஞ்சாரம் முடிந்தவுடன் உன்னைக் கழற்றி, உன்னை நீராட்டுகின்றனர். உனக்குக் குளிர்ச்சியும் வாசனையும் உண்டாகும் விதமாக சந்தனம் பூசுகின்றபோது, அந்த சந்தனரேகைகள் புதிதாக வேறு கோடுகள் உருவாக்கியபடி நீ உள்ளாய்.