Sri Paduka Sahasram - Paththati 27 - ரேகா பத்ததி (ச்லோகம் 816)
Paththati 27 - ரேகா பத்ததி
பதகமல தல அந்த: ஸம்ச்ரிதாநி ஆதபத்ர த்வஜ ஸரஸிஜ முக்யாநி ஐச்வரீலக்ஷணாநி அவகமயஸி சௌரே: பாதுகே மாத்ருசாநாம் உபரி பரிணதை: ஸ்வை: தேவி ரேகாவிசேஷை:
பாதுகாதேவியே! ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகளில், “இவனே ஸர்வேச்வரன்”, என்பதை உணர்த்தும் விதமாக குடை, தாமரை, கொடி போன்ற அடையாளங்கள் உள்ளன. இவற்றை அறியாத என்னைப் போன்றவர்களுக்காக இவற்றை உனது கோடுகளாகக் கொண்டு அறிவிக்கிறாய் போலும்.