Sri Paduka Sahasram - Paththati 27 - ரேகா பத்ததி (ச்லோகம் 815)

Paththati 27 - ரேகா பத்ததி

த்ரிதச மகுட ரத்ந உல்லேக ரேகா: உபதேசாத் பரிமணயஸி பும்ஸாம் பாதுகே மூர்த்நி லக்நா நரகமதந ஸேவாஸம்பதம் ஸாதயித்ரீ நியதி விலகிதாநாம் நிஷ்க்ருதிம் துர்லிபீநாம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! நரகன் என்ற அசுரனை அழித்த ஸ்ரீரங்கநாதனுக்குக் கைங்கர்யம் செய்தல் என்பதையே செல்வமாக உண்டாக்கும் விதமாக, அனைத்து உயிர்களின் தலைகளில் நீ அமர்கிறாய். இதன் மூலம் நீ செய்வது என்னவென்றால் – தேவர்களின் க்ரீடங்களில் உள்ள இரத்தினங்கள் மூலம் உன்னில் உண்டாக்கிய கோடுகள் கொண்டு, மக்களுடைய விதியின் மூலம் அவர்கள் தலையில் எழுதப்பட்ட கெட்ட எழுத்துக்களை அழித்தல் என்பதைச் செய்கிறாய் (இதனால் கைங்கர்யச் செல்வம் ஏற்படுகிறது).