Sri Paduka Sahasram - Paththati 27 - ரேகா பத்ததி (ச்லோகம் 813)

Paththati 27 - ரேகா பத்ததி

அபிதோ மணி பாதுகே ஸ்புரந்த்யா: தவ ரேகாவிததே ததாவிதாயா: முரவைரி பதாரவிந்த ரூடை: அநுகல்பாயிதம் ஆதிராஜ்ய சிஹ்நை:

இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! தாமரை மலர் போன்ற ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில், ”இவனே அனைத்து உலகங்களுக்கும் அதிபதி”, என்பதை உணர்த்தும் கோடுகள் உள்ளன. உன் மீது தேவர்களின் க்ரீடங்கள் ஏற்படுத்திய கோடுகளைக் காணும்போது, அவனது ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளில் உள்ள கோடுகள் இரண்டாம்படியாகவே உள்ளன (பாதுகையில் உள்ள கோடுகள் மூலமாகவே ஸ்ரீரங்கநாதனுக்கு அதிகாரம் கிடைக்கிறது, அவனது திருவடிகளில் உள்ள கோடுகளால் அல்ல என்றார்).