Sri Paduka Sahasram - Paththati 27 - ரேகா பத்ததி (ச்லோகம் 812)

Paththati 27 - ரேகா பத்ததி

மணி மௌளி நிகர்ஷணாத் ஸுரணாம் வஹஸே காஞ்சந பாதுகே விசித்ரம் கமலாபதி பாத பத்ம யோகாத் அபரம் லக்ஷணம் ஆதிராஜ்ய ஸாரம்

தங்கமயமான பாதுகையே! தேவர்களுடைய கிரீடங்கள் உன்னை வணங்குவதற்காக அவர்கள் தலையைக் குனியும்போது, ஒன்றுடன் ஒன்று உராய்கின்றன. அப்போது அந்தக் கிரீடங்களில் உள்ள இரத்தினங்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வதால், ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் உன் மீது ஏற்படுத்துகின்ற கோடுகளைக் காட்டிலும் வேறுவிதமான கோடுகள் உன்னில் ஏற்படுகின்றன. இந்தப் புதிய கோடுகள் மூலம் அனைத்து உலகிற்கும் நீயே ராணியாக உள்ளாய் என்னும் அடையாளத்தை அடைகிறாய்.