Sri Paduka Sahasram - Paththati 27 - ரேகா பத்ததி (ச்லோகம் 811)
Paththati 27 - ரேகா பத்ததி
ஸூசயந்தீம் ஸ்வரேகாபி: அநாலோக்ய ஸரஸ்வதீம் அலேகநீய ஸௌந்தர்யாம் ஆச்ரயே சௌரிபாதுகாம்
எழுதத்தகாத சொற்களைத் தெரியப்படுத்துவதாகவும், எழுதி முடிக்க இயலாத அழகைக் கொண்டதாகவும் உள்ள கோடுகளைத் தன்னிடம் கொண்டதான ஸ்ரீரங்கநாதனின் பாதுகையை நான் அடைகிறேன்.
வேதங்களை எழுதி வாசிக்கக் கூடாது என்பார்கள். அப்படிப்பட்ட வேதங்களே இந்தப் பாதுகையில் கோடுகளின் வடிவில் உள்ளன என்றார்.