Sri Paduka Sahasram - Paththati 26 - யந்த்ரிகா பத்ததி (ச்லோகம் 810)
Paththati 26 - யந்த்ரிகா பத்ததி
ப்ரதமா கலேவ பவதீ சரணாவநி பாதி ரங்கசந்த்ரமஸ: ச்ருங்க உந்நதிரிவ யத்ர ச்ரியம் விபாவயதி யந்த்ரிகா யோக:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னைக் காணும்போது ஸ்ரீரங்கத்தின் சந்த்ரனாகிய ஸ்ரீரங்கராஜனின் முதல் கலை போன்று உள்ளாய். இப்படியாக உள்ள அந்தக் கலையின் நுனி போன்ற அழகை உனது குமிழ் ஏற்படுத்துகிறது.