Sri Paduka Sahasram - Paththati 26 - யந்த்ரிகா பத்ததி (ச்லோகம் 809)

Paththati 26 - யந்த்ரிகா பத்ததி

நித்யம் பதாவநி நிபத்தகிரீட சோபம் பத்மாலயா பரிசிதம் பதம் உத்வஹந்த்யா: அங்கீகரோதி ருசிம் அங்குளி யந்த்ரிகா தே ஸாம்ராஜ்ய ஸம்பத அநுரூபம் இவ ஆதபத்ரம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் எப்போதும் ஸ்ரீரங்கநாச்சியாரால் பிடிக்கப்பட்டபடி உள்ளது. இந்தத் திருவடிகள் உனக்குக் கிரீடம் போன்று உள்ளது. இப்படிப்பட்ட திருவடிகளைத் தாங்கும் உனது குமிழ் என்பது, நீயே சக்ரவர்த்தினி என்பதை அறிவிக்கும் குடை போன்ற அழகான தோற்றத்தை அடைகிறது.