Sri Paduka Sahasram - Paththati 26 - யந்த்ரிகா பத்ததி (ச்லோகம் 808)
Paththati 26 - யந்த்ரிகா பத்ததி
உபரி விநிஹிதஸ்ய கேசவ அங்க்ரே: உபரி பதாவநி யந்த்ரிகாத்மிகா த்வம் இதி தவ மஹிமா லகூகரோதி ப்ரணத ஸுரேச்வர சேகராதி ரோஹம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளின் மீது நீ குமிழ் ரூபமாக நிற்கிறாய். இதனால் உன்னை வணங்கி நிற்கின்ற தேவர்களின் க்ரீடங்களில் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் ஏறுகின்றன என்ற பெருமையை, உனது பெருமை சிறிதாக்குகிறது.
எது ஒன்றின் மீது வைக்கப்படுகிறதோ, அந்தப் பொருளே உயர்ந்தது, கீழே உள்ள பொருள் சற்றே தாழ்ந்தது என்பது பொதுவான உண்மை. தேவர்களின் க்ரீடங்களில் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் வைக்கப்படுவதால், அவை உயர்ந்தவையே. ஆனாலும், அந்தத் திருவடிகள் மீது குமிழ் உள்ளதால், ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் சற்றே தாழ்ந்தன.