Sri Paduka Sahasram - Paththati 26 - யந்த்ரிகா பத்ததி (ச்லோகம் 807)
Paththati 26 - யந்த்ரிகா பத்ததி
அலங்க்ருதம் கர்ணிகயா உபரிஷ்டாத் உதக்ரநாளம் தவ யந்த்ரிகாம்சம் பத்மாபதே: பாதஸரோஜ லக்ஷ்ம்யா: ப்ரத்யேமி பாதாவநி கேளிபத்மம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உனது குமிழின் மேற்புறம் தாமரை மலர்களின் நடுப்பாகத்தில் உள்ள கர்ணிகை என்னும் பாகத்தினால் அலங்கரிக்கப்பட்டது போன்று உள்ளது. இப்படியாக உள்ள இந்தக் குமிழைக் காணும்போது – ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான ஸ்ரீரங்கராஜனின் திருவடிகள் என்னும் தாமரை மலரில் காணப்படும் மஹாலக்ஷ்மி, தனது விளையாட்டிற்காகக் கையில் வைத்துள்ள தாமரைமலர் என்றே எண்ணுகிறேன் (திருவடியில் உள்ள மஹாலக்ஷ்மிக்காக உள்ள தாமரை மலர் என்று குமிழ்களை வர்ணிக்கிறார்)