Sri Paduka Sahasram - Paththati 26 - யந்த்ரிகா பத்ததி (ச்லோகம் 806)

Paththati 26 - யந்த்ரிகா பத்ததி

சங்கே பவத்யாஸ் ஸுபகம் ப்ரதீகம் ரங்கேச பாதாங்குளி ஸங்க்ரஹார்த்தம் த்ராணாய பாதாவநி விஷ்டபாநாம் ஆஜ்ஞாகரீம் அங்குளி முத்ரிகாம் தே

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடி விரல்களுக்கு ஏற்ற பிடிப்பாக உனது குமிழ் உள்ளது. இந்தக் குமிழை - அனைத்து உலகங்களையும் காப்பாற்றும் பொருட்டு, உலகினருக்கு இடையூறு செய்பவர்களைக் கண்டு, ”இப்படிச் செய்யாதீர்கள்”, என்று கட்டளை செய்கின்ற உனது ஆள்காட்டி விரலின் முத்திரை என்றே நான் எண்ணுகிறேன்.