Sri Paduka Sahasram - Paththati 26 - யந்த்ரிகா பத்ததி (ச்லோகம் 805)
Paththati 26 - யந்த்ரிகா பத்ததி
அநுயாத மனோரதா முராரே: பவதீ கேளிரத ச்ரியம் ததாதி சரணாவநி யந்த்ரிகா தவைஷா தநுதே கூபர ஸம்பதம் புரஸ்தாத்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னை அடைந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற எண்ணியவளாக, நீ நினைத்தபோது ஸ்ரீரங்கநாதனை அவர்களிடம் அழைத்துப் போகின்ற தேர் போன்று உள்ளாய். உனது குமிழ் என்பது அந்தத் தேரின் முன்னே காணப்படும் ஏர்க்கால் போன்ற தோற்றம் அளிக்கிறது.