Sri Paduka Sahasram - Paththati 26 - யந்த்ரிகா பத்ததி (ச்லோகம் 804)
Paththati 26 - யந்த்ரிகா பத்ததி
ஸ்வததே மணிபாதுகே த்வதீயா பதசாசாயுக யந்த்ரிகா விசித்ரா பரமம் புருஷம் ப்ரகாசயந்தீ ப்ரணவஸ்யேவ பரா அர்த்தமாத்ரா
ஸ்ரீரங்கநாதனின் இரத்தினகற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஆச்சர்யம் ஏற்படுத்துவதாக உள்ளதும், உன் மீது உள்ளதும் ஆகிய இந்தத் திருவடிகளில் இரண்டு விரல்களுக்கும் பிடிப்பாக உள்ள குமிழ் எப்படி உள்ளது என்றால் – உயர்ந்தவனான ஸ்ரீரங்கநாதனைக் காண்பிக்கின்ற ப்ரணவ மந்த்ரத்தின் இறுதியில் உள்ள ”ம” என்ற எழுத்து போன்று (ம என்பது ஜீவாத்மாவைக் குறிக்கும்) இன்பமாக உள்ளது.