Sri Paduka Sahasram - Paththati 26 - யந்த்ரிகா பத்ததி (ச்லோகம் 803)

Paththati 26 - யந்த்ரிகா பத்ததி

முரபிந் மணி பதுகே த்வதீயாம் அநகாம் அங்குளி யந்த்ரிகாம் அவைமி ஸ்வயம் உந்நமிதாம் ப்ரதேசிநீம் தே பரமம் தைவதம் ஏகம் இதி ருசந்தீம்

ஸ்ரீரங்கநாதனின் இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடி விரல்களுக்கு இன்பமான பிடிப்பாக உள்ள குமிழானது தானாகவே மேல்புறமாக நீண்டும், ”அனைத்திற்கும் மேற்பட்ட தெய்வம் ஸ்ரீரங்கநாதனே”, என்று உறுதிபடக் கூறும் ஆள்காட்டி விரல் போன்றும் உள்ளதாக நான் எண்ணுகிறேன்.