Sri Paduka Sahasram - Paththati 26 - யந்த்ரிகா பத்ததி (ச்லோகம் 802)
Paththati 26 - யந்த்ரிகா பத்ததி
ப்ரஸபம் ப்ரதிருத்ய கண்டகாதீந் பவதீ சௌரி பதாம்புஜாத் அதஸ்தாத் சரணாவநி தாரயதி அமுஷ்மிந் உசிதச்சாயம் உபர்யபி ப்ரதீகம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் தாமரை போன்ற திருவடிகளின் கீழ்பக்கத்தில் முள் போன்றவை ஏறாமல் வலிவுடன் நீ தடுத்துவிடுகிறாய். அந்தத் திருவடிகளின் மேற்புறத்தில் தகுதியான அழகிய நிழலை உண்டாக்குகின்ற குமிழ் என்ற அவயவத்தைத் தாங்கி நிற்கிறாய்.