Sri Paduka Sahasram - Paththati 26 - யந்த்ரிகா பத்ததி (ச்லோகம் 801)
Paththati 26 - யந்த்ரிகா பத்ததி
உதக்ர யந்த்ரிகாம் வந்தே பாதுகாம் யந்நிவேசநாத் உபயர்பி பதம் விஷ்ணோ: ப்ரத்யாதிஷ்ட ப்ரஸாதநம்
மேலே நீட்டியபடி உள்ள குமிழைக் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையை நான் வணங்குகிறேன். இப்படியாகக் குழிழைத் தனது மேற்பக்கத்தில் வைத்துள்ளதால் ஸ்ரீரங்கநாதன் திருவடிகள், ”மேற்பக்கத்தில் தங்களுக்கு ஆபரணம் வேறு வேண்டாம்”, என்று தள்ளியபடி உள்ளன.