Sri Paduka Sahasram - Paththati 25 - ஸந்நிவேச பத்ததி (ச்லோகம் 800)

Paththati 25 - ஸந்நிவேச பத்ததி

மாநே பரம் ஸமாநே ப்ரத்யக்ஷேண ஆகமே நாபி ஹரி சரணஸ்ய தவாபிது வைஷம்யம் ரக்ஷ்ய ரக்ஷகத்வாப்யாம்

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளுக்கும் உனக்கும் பார்வை மற்றும் சாஸ்த்ரங்கள் மூலமாக அளவு மற்றும் ஞானம் ஒன்றாகவே உள்ளன. ஆயினும் அவன் திருவடியானது காப்பாற்றப்படுகின்ற வஸ்து, நீ காப்பாற்றுகின்ற வஸ்து என்று வேறுபாடு காணப்படுகிறது.