Sri Paduka Sahasram - Paththati 25 - ஸந்நிவேச பத்ததி (ச்லோகம் 799)

Paththati 25 - ஸந்நிவேச பத்ததி

தத்தத் வருத்தே அநுகுணதயா வாமநீம் வ்யாபிநீம் வா ப்ராப்தே ரங்க ப்ரதித விபவே பூமிகாம் ஸூத்ரதாரே மந்யே விச்வ ஸ்திதிமய மஹாநாடிகாம் நேதுகாமா நாநா ஸம்ஸ்தா பவதி பவதீ பாதுகே நர்த்தகீவ

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கம் என்னும் நாடக மேடையில் கூத்தாடும் தலைவனான ஸ்ரீரங்கநாதன், இந்த உலகைக் காக்கும் நாடகத்தில் குட்டையாகவோ நெட்டையாகவோ பல வேஷங்கள் அடைகிறான். அப்போது இந்த உலகைக் காப்பாற்றவேண்டும் என்ற பெரிய நாடகத்தை, ஸ்ரீரங்கநாதனைக் கொண்டு நடத்த எண்ணும் நீ செய்வது என்ன? அந்த நாட்டியக்காரனின் அளவு போன்றே பலவிதமான உருவம் கொண்டுள்ள நாட்டியக்காரியாக மாறுகிறாய் (பெரியதும் சிறியதுமாக) என்று எண்ணுகிறேன்.