Sri Paduka Sahasram - Paththati 25 - ஸந்நிவேச பத்ததி (ச்லோகம் 798)

Paththati 25 - ஸந்நிவேச பத்ததி

யுகபத் அநுவிதாஸ்யந் யெளவதம் துல்யராகம் யதுபதி: அதிசக்ரே யாவதோ ரூபபேதாந் தத் இதம் அதிவிகல்பம் பிப்ரதீ ஸந்நிவேசம் தவ கலு பதரக்ஷே தாவதீ மூர்த்தி: ஆஸீத்

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! தன் மீது சமமான ஆசை கொண்ட பதினாறாயிரம் பெண்களின் கூட்டத்தை ஒரே நேரத்தில் மகிழ்வு செய்ய எண்ணிய கண்ணன், ஒரே நேரத்தில் பல ரூபங்களை எடுத்துக்கொண்டான். மிகவும் ப்ரஸித்தி பெற்ற அவனது இந்த லீலையை அனுபவிக்க எண்ணிய உனக்கு, அதிகமான எண்ணிக்கை கொண்டதான அவயவங்களின் இருப்பை அடைய, பல ரூபங்கள் ஏற்பட்டது அல்லவோ (அதாவது 32, 000).