Sri Paduka Sahasram - Paththati 25 - ஸந்நிவேச பத்ததி (ச்லோகம் 797)
Paththati 25 - ஸந்நிவேச பத்ததி
மோதமாந முநிப்ருந்த ஷட்பதா பாதி முக்தி மகரந்த வர்ஷிணீ கா அபி ரங்க ந்ருபதே: பதாம்புஜே கர்ணிகா கநக பாதுகா மயீ
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! திருவடிகள் என்னும் தாமரைமலரின் உள்ளே காணப்படும் தங்கமயமான காய் போன்று நீ உள்ளாய். ஸ்ரீரங்கநாதனை அடைகின்ற முனிவர்கள், வண்டுகளின் கூட்டம் போன்று உன்னை மொய்க்கின்றனர். நீ மோக்ஷம் என்னும் தேனைப் பெருகியபடி உள்ளாய் (அந்த வண்டுகள் அவற்றைப் பருகி நிற்கின்றன).