Sri Paduka Sahasram - Paththati 25 - ஸந்நிவேச பத்ததி (ச்லோகம் 796)

Paththati 25 - ஸந்நிவேச பத்ததி

ஆலவாலாம் இவ பாதி பாதுகே பாதபஸ்ய பவதீ மதுத்விஷ: யத்ஸமீப விநதஸ்ய சூலிந: ஸாரிணி பவதி மெளளி நிம்நகா

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதன் என்னும் கற்பக மரத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட பாத்தி போன்று நீ காணப்படுகிறாய். உனது அருகில் வணங்கி நிற்கும் சிவனின் தலையில் உள்ள கங்கையானது, கால்வாய் போன்று அந்தப் பாத்தியில் பாய்கிறது.