Sri Paduka Sahasram - Paththati 25 - ஸந்நிவேச பத்ததி (ச்லோகம் 795)
Paththati 25 - ஸந்நிவேச பத்ததி
அப்ரபூதம் அபவத் ஜகத் த்ரயம் யஸ்ய மாதும் உதிதஸ்ய பாதுகே அப்ரமேயம் அமிதஸ்ய தத்பதம் நித்யமேவ நநு ஸம்மிதம் த்வயா
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் திருவடி உலகங்களை அளப்பதற்காக உயர்ந்து சென்றபோது, அந்த அடிக்கு மூன்று உலகங்களும் போதாமல் இருந்தன. அப்படிப்பட்ட அளவிட இயலாத ஸ்ரீரங்கநாதனின் திருவடியானது உன்னால் எளிதாக அளக்கப்பட்டு (உன்னுடைய அளவாக) உள்ளது.