Sri Paduka Sahasram - Paththati 25 - ஸந்நிவேச பத்ததி (ச்லோகம் 794)
Paththati 25 - ஸந்நிவேச பத்ததி
பதம் அப்ரமாணம் இதி வாதிநாம் மதம் மதுஜித் பதே மஹதி மாஸ்ம பூத் இதி வ்யுதபாதி தஸ்ய சரணாவநி த்வயா நிகமாத்மந: தவ ஸமப்ரமாணதா
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! ஸ்ரீரங்கநாதனுடைய திருவடியின் அளவு எல்லையற்றது என்று ஒரு சிலர் எண்ணக்கூடும். இப்படிப்பட்ட எண்ணம் ஸ்ரீரங்கநாதனின் திருவடியைக் குறித்து வரக்கூடாது என்று நீ எண்ணினாய் போலும் (அதாவது, திருவடிகள் சரியான அளவில்லாதவை என்ற தவறான எண்ணம் உண்டாகக்கூடாது). இதனால், வேத ஸ்வரூபமாக உள்ள உன்னால், ஸ்ரீரங்கநாதனின் திருவடிக்குச் சரியான அளவு கொண்டு இருத்தல் என்பது உணர்த்தப்பட்டது போலும்.