Sri Paduka Sahasram - Paththati 25 - ஸந்நிவேச பத்ததி (ச்லோகம் 793)

Paththati 25 - ஸந்நிவேச பத்ததி

யே நாம பக்தி: நியதை: தவ ஸந்நிவேசம் நிர்விச்ய நேத்ரயுகளை: ந பஜந்தி த்ருப்திம் காலக்ரமேண கமலேக்ஷண பாதரக்ஷே ப்ராயேண தே பரிணமந்தி ஸஹஸ்ர நேத்ரா:

தாமரை போன்ற அழகான கண்களைக் கொண்ட ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற்றும் பாதுகையே! ஒரு சிலர் உன்னுடைய, மிகவும் அழகான உருவத்தை, ஆழ்ந்த பக்தி கொண்டு, தங்கள் இரண்டு கண்களால் பார்த்து நிற்கக்கூடும். தங்களுக்கு உனது அழகை அனுபவிக்க இரண்டு கண்கள் போதவில்லையே என்று மனநிறைவு அடையாமல் நிற்கக்கூடும். அவர்கள் காலப் போக்கில் ஆயிரம் கண்கள் கொண்ட இந்திர பதவியை அடைகின்றனர்.