Sri Paduka Sahasram - Paththati 25 - ஸந்நிவேச பத்ததி (ச்லோகம் 792)
Paththati 25 - ஸந்நிவேச பத்ததி
அங்காந்தரேஷு நிஹிதாநி அகிலாநி காமம் பர்யாய கல்பந ஸஹாநி விபூஷணாநி நித்யம் முகுந்த பத பத்ம தல அநுரூபம் நைபத்யம் அம்ப பவதீ நயந அபிராமம்
அனைவருக்கும் தாய் போன்ற பாதுகையே! ஸ்ரீரங்கநாதனின் மற்ற அவயவங்களில் (திருமேனி உறுப்புக்கள்) அணிவிக்கப்படும் ஆபரணங்கள் வெவ்வேறாக உள்ளன. அந்த அவயவங்களில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு ஆபரணங்கள் அணிவிக்கப்படுவதை, அந்த அவயவங்கள் ஏற்றுக் கொள்கின்றன. ஆனால், தாமரைமலர் போன்ற மென்மையான அவன் திருவடிகளுக்கு ஏற்றதாகவும், காண்பவர்களின் கண்களுக்கு இனிமையாகவும் உள்ள உன்னைத் தவிர வேறு எதனையும் அவனது திருவடிகளில் அணிவிக்கப்பட இயலாமல் நீ மட்டுமே உள்ளாய். (அதாவது, திருவடிகளில் பாதுகைகளைத் தவிர வேறு எதனையும் அணிவிக்க இயலாது).