Sri Paduka Sahasram - Paththati 25 - ஸந்நிவேச பத்ததி (ச்லோகம் 791)
Paththati 25 - ஸந்நிவேச பத்ததி
ரங்கேசிது: சரணபங்கஜயோ: பஜந்தீ ரக்ஷாப்ரஸாதந விகல்ப ஸஹாம் அவஸ்தாம் மாந்யா அக்ருதி: நிவிசஸே மணிபாதரக்ஷே மத்யே பரிச்சத விபூஷண வர்க்கயோ: த்வம்
இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட பாதுகையே! அனைவராலும் கொண்டாடத் தக்கதான உருவம் உள்ள நீ, ஸ்ரீரங்கநாதனின் தாமரைமலர் போன்ற திருவடிகளைக் காப்பதற்காக உள்ளாயா அல்லது ஆபரணமாக உள்ளாயா என்று சந்தேகம் எழுகிறது. இப்படியாக இரண்டிற்கும் ஏற்ற நிலையைக் கொண்ட அவனது குடை போன்ற சாமான்களுடைய வரிசையிலும், ஆபரணங்களின் வரிசையிலும் நீ உள்ளாய்.